19 முறை சூதாட்டம்: அதிரடியாக தடை விதித்த ஐ.சி.சி!

Wednesday, October 10th, 2018

ஹாங்காங் கிரிக்கெட் அணியைச் சேர்ந்த மூன்று வீரர்கள், சூதாட்ட தடுப்பு விதிகளை 19 முறை மீறியதற்காக ஐ.சி.சி இடைக்கால தடை விதித்துள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு உலகக் கிண்ண தகுதிச்சுற்று போட்டிகளில், ஹாங்காங் அணியைச் சேர்ந்த இர்பான் அகமது, நதீம் அகமது, ஹசீப் அம்ஜத் ஆகிய வீரர்கள் சூதாட்டப் புகாரில் சிக்கினர் .

சகோதரர்களான இர்பான், நதீம் இருவரும் 2016ஆம் ஆண்டு டி20 போட்டிகளிலும் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

இவை தவிர, 2014ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்திலும் இவர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும் புகார் உள்ளது.

இதேபோல் இர்பான் 9 முறையும், நதீம் 5 முறையும் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டனர். இந்நிலையில், 2014ஆம் ஆண்டு ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் மூன்று வீரர்களும் மோசமாக ஆடியதாக எழுந்த புகார் தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இர்பான் அகமது, நதீம், ஹசீப் ஆகிய மூன்று வீரர்களுக்கும் ஐ.சி.சி இடைக்கால தடை விதித்துள்ளது. இதனால் இவர்கள் இரண்டு வாரத்திற்கு போட்டிகளில் பங்கேற்க முடியாது.

Related posts: