இந்தியாவை இலேசாக நினைக்காதீர்கள் தென்னாபிரிக்கரான இலங்கை பயிற்றுவிப்பாளர் எச்சரிக்கை!

Tuesday, December 26th, 2017

இந்திய அணியை இலேசாக எடை போட்ட்டுவிடாதீர்கள்ள் என தென் ஆப்பிரிக்கரான, இலங்கைப் பயிற்சியாளர் நிக் போத்தாஸ் கூறியுள்ளார்.

 இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி மூன்று வித தொடர்களில் விளையாடி எத்தொடரையும் கைப்பெற்றது, நாடு திரும்பியது. இந்திய அணியை பொறுத்த வரை அதன்துடுப்பாட்ட வரிசை வலுமையானதாக உள்ளது என்றும் அவர்கள் ஓட்டங்கள் எடுக்க ஆரம்பித்துவிட்டால் அது எதிரணிக்கு மிகவும் கடினமானதாக மாறிவிடும் என்று நிக் போத்தாஸ் கூறியுள்ளார்.

மமேலும் அவர் கூறுகையில், இந்திய அணி சகல விதத்திலும் வலுவானடாக காணப்படுகின்றது. பசுந்தரை மமைதானம் கொடுத்தால் இந்திய அணி பந்து வீச்சாளர்கள் எதிரணியினரை சுருட்டும் திறமை கொண்டவர்கள்.மட்டை விக்கெட் என்றால் அதற்கும் அதன் அடிப்படைகள் சரியாகவே உள்ளது. சுழற்பந்து மைதானம் என்றாலும் இந்திய அணி தயாராக உள்ளது. அணியில் மாற்றம் செய்தாலும் அது இந்திய அணியைக் காயப்படுத்துவதில்லை. மேலும்

டோனி ஆட்டத்தை முடித்துக் கொடுக்கிறார், இந்த வகையில் அவர் உலகின் சிறந்த வீரர், மேலும் சகல துறை இளைய வீரரான பாண்டயா எந்நிலையிலும் ஆட்டத்தின் போக்கை மாற்றும் ஆற்றல் கொண்டவராக காணப்படுகின்றார்.

எனவே ஒருநாள் தொடரும் தென் ஆப்பிரிக்காவுக்கு சவாலான ஒன்றாகத் தான் இருக்கும் என்று கூறியுள்ளார்.தென் ஆப்பிரிக்கா தொடர் இந்திய அணிக்கு சவாலாக இருக்கும் என்று பலர் கூறிவருன்ற நிலையில் இவரது கருத்து பெரும் அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது. இரு துருவங்களின் பலப்பரீட்சை விரைவில் கண்ணூடு.

Related posts: