BPL தொடர் – முதன்முறையாக களமிறங்கவுள்ள இயன் மோர்கன் மற்றும் ஜே.பி. டுமினி!
Tuesday, July 23rd, 2019
உலகக் கிண்ணத்தை வெற்றிகொண்டதன் பின்னர் இங்கிலாந்து அணியின் தலைவர் இயன் மோர்கன் முதன் முறையாக பங்களாதேஷ் ப்ரீமியர் லீக்கிற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவர் இயன் மோர்கன் மற்றும் உலகக் கிண்ணத் தொடருடன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற தென்னாபிரிக்க வீரர் ஜே.பி. டுமினி ஆகியோர் பங்களாதேஷ் ப்ரீமியர் லீக்கில் (BPL) முறையே டாக்கா டைனமைட்ஸ் மற்றும் ராஜ்ஷாஹி கிங்ஸ் அணிகளுக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் விதிமுறைப்படி, வீரர்கள் வரைவில் இடம்பெறாத 2 வெளிநாட்டு வீரர்களை நேரடியாக தங்களது அணிகளில் ஒப்பந்தம் செய்வதன் மூலம் குறித்த இரண்டு வீரர்களையும், டாக்கா டைனமைட்ஸ் மற்றும் ராஜ்ஷாஹி கிங்ஸ் அணிகள் இணைத்துள்ளன.
Related posts:
மகளிர் டி20 உலகக்கிண்ணம்: வென்றது மேற்கிந்திய தீவுகள்
கடற்கரை கரப்பந்தாட்டத்தில் கச்சாய் அ.த.க.பா. சம்பியன்!
போட்டியிலிருந்து விலகிய ஜேம்ஸ் எண்டர்சன் !
|
|
|


