குற்றத்தை ஒப்புக் கொண்டார் இந்திய அணியின் தலைவர் கோஹ்லி!

Tuesday, September 24th, 2019


தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் விதிமுறைகளை மீறியதாக கோஹ்லிக்கு ஐசிசி கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய தென் ஆப்பிடிக்கா அணி 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரை 1-1 என டிரா செய்தது. நடந்த 3-வது போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி டிகாக்கின் அதிரடியால் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இப்போட்டியின் 5-வது ஓவரை தென் ஆப்பிரிக்கா அணியின் பியூரன் ஹென்ட்ரிக்ஸ் வீசினார். அந்த ஓவரில் ஓட்டம் எடுக்கும் போது கோஹ்லி வழியில் நின்று கொண்டிருந்த ஹெண்ட்ரிக்ஸ் கையில் இடித்துள்ளார். இதற்கு ஐசிசி தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பாக ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில், கோஹ்லி வீரர்களுக்கான ஐசிசி விதி 2.12ஐ மீறியுள்ளார். அதாவது ஆட்டத்தின் போது மற்ற வீரர்களுடனோ அல்லது நடுவர் இடமோ தேவையில்லாமல் உடல் ரீதியாக தொடவோ அடிக்கவோ கூடாது என்ற விதியை மீறியுள்ளார்.

இந்த விதி மீறலை கோஹ்லி ஒப்புக் கொண்டுள்ளார். எனவே அவருக்கு ஐசிசி கண்டனம் தெரிவிப்பது உடன் ஒரு ஒழுங்குமுறை மதிப்பிழப்பு புள்ளியையும் (demerit point)அளித்துள்ளது.

கோஹ்லி ஏற்கெனவே இரண்டு ஒழுங்குமுறை மதிப்பிழப்பு புள்ளிகளை வைத்திருக்கிறார். 2018-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தென் ஆப்பிரிக்காவுடன் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் போது ஒரு மதிப்பிழப்பு புள்ளியை பெற்றார்.

அதற்கு பிறகு 2019-ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கோஹ்லி மற்றொரு புள்ளியை பெற்று இருந்தார். ஆகவே இது அவர் பெரும் மூன்றாவது குறைபாடு புள்ளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: