இந்தியாவுக்கு எதிராக சாதித்துக் காட்டுவேன் – கெய்ல் சவால்

Wednesday, March 30th, 2016

டி20 உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் நாளை (31) இந்தியா மேற்கிந்தியத் தீவுகள் மோதுகின்றன. இந்த போட்டிக்காக மும்பையில் இரு அணி வீரர்களும் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுப்பட்டுவருகின்றர். பயிற்சியில் ஈடுபடுவதற்கு முன் மேற்கிந்திய வீரர் கிறிஸ் கெய்ல் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியா முழு தன்னம்பிக்கையுடன் உள்ளது என்பதில் சந்தேகம் இல்லை. குறிப்பிட்ட இந்திய வீரரை(வீராட் கோலி) மட்டும் குறிவைக்க முடியாது. அந்த அணியில் பல திறமைசாலிகள் உள்ளனர். இங்கு அவர்களை தோற்கடிப்பது கடினமான காரியம்.

ஆனால் நாங்கள் அவர்களை தோற்கடிக்க தயாராக உள்ளோம். எனக்கு எதிராக அஸ்வினையோ அல்லது வேறு யாரை வேண்டுமானானும் பயன்படுத்தலாம். தோனி என்ன செய்வார் என்பதை கணிக்க முடியாது. ஆனால் கிறிஸ் கெய்லால் என்ன செய்ய முடியும் என்பதை காட்ட நான் தயாராக உள்ளேன். அதற்காக தயாராகி வருகிறேன். யார் பந்து வீசினாலும் நான் அவர்களின் பந்துகளை அடித்து ஆடத்தான் முயற்சிப்பேன். பந்தை எவ்வளவு வேகமாக அடிக்க முடியுமோ அவ்வளவு வேகமாக அடிக்க வேண்டும், அவ்வளவுதான்.

எங்கள் அணியிலும் பல பல திறமைசாலிகள் உள்ளனர். கெய்ல் ரன் குவிக்க தவறினாலும் மற்ற வீரர்கள் சிறப்பாக ஆடி அணியை வெற்றி பெற வைக்க வேண்டும்.

Related posts: