உலக பெண்கள் டென்னிஸ் தொடரிலிருந்து விலகினார் செரீனா!

Wednesday, October 19th, 2016

அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் காயத்தால் உலக பெண்கள் டென்னிஸ் போட்டியில் இருந்தும் விலகி இருக்கிறார்.

தரவரிசையில் முதல் 8 வீராங்கனைகள் பங்கேற்கும் உலக பெண்கள் டென்னிஸ் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டி சிங்கப்பூரில் வருகிற 23-ம் திகதி தொடங்குகிறது.

இந்த போட்டியில் ஒற்றையர் பிரிவில் பங்கேற்க உலக தர வரிசையில் 2-வது இடத்தில் இருப்பவரும், 22 முறை கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டத்தை வென்றவருமான அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் தகுதி பெற்று இருந்தார்.

தோள்பட்டை காயம் காரணமாக இந்த ஆண்டில் 8 போட்டியில் மட்டுமே கலந்து கொண்டதால் தர வரிசையில் நம்பர் ஒன் இடத்தை இழந்த 35 வயதான செரீனா வில்லியம்ஸ் காயத்தால் உலக பெண்கள் டென்னிஸ் போட்டியில் இருந்தும் விலகி இருக்கிறார்.

இது குறித்து செரீனா வில்லியம்ஸ் இணையத்தளத்திற்கு அளித்த பேட்டியில், ‘இந்த ஆண்டு எனக்கு மிகவும் கடினமானது. எனது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் குணமடையும் வரை ஓய்வு எடுக்கும் படி டாக்டர் அறிவுறுத்தி இருப்பதால் உலக போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது வருத்தம் அளிக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.

03col134754411_4889671_18102016_aff_cmy

Related posts: