அமெரிக்க டென்னிஸ் – வெளியேறினார் நடப்பு சாம்பியன் ஜோகோவிச்!
Wednesday, September 4th, 2019அமெரிக்க ஓப்பன் டென்னிசில் நடப்பு சாம்பியன் நோவக் ஜோகோவிச் காயத்தால் வெளியேறியதால், வாவ்ரிங்கா காலிறுதிக்கு முன்னேறினார்.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் காலிறுதிக்கு முந்தையை சுற்றுக்கான ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதில் உலகின் முதல் நிலை வீரரும், நடப்பு சாம்பியனுமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 4-வது சுற்றில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த வாவ்ரிங்காவை எதிர்கொண்டார்.
இதில் வாவ்ரிங்கா 6-4, 7-5, 2-1 என முன்னிலை பெற்றபோது, ஜோகோவிச்சுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவர் போட்டியில் இருந்து விலகினார். இதைத்தொடர்ந்து வாவ்ரிங்கா காலிறுதிப் போட்டிக்கு முன்னேறியதாக அறிவிக்கப்பட்டது.
Related posts:
IPL – 2017 போட்டிக்கான முழுமையான அட்டவணை!
ஒருநாள் தொடர் – தொடர்ந்தும் அவுஸ்திரேலிய அணி வெற்றி!
அகிலவின் பந்துவீச்சுப் பாணியில் மாற்றம்!
|
|