இலங்கை டெஸ்ட் கிரிக்கட் ஆரம்பவீரராக டில்ருவான் பரீட்சிக்கப்படுகின்றாரா?

Thursday, December 14th, 2017

இலங்கை டெஸ்ட் அணியை பிரதிந்தித்துவப்படுத்தி விளையாடிவரும் சகலதுறை வீரரான டில்ருவான் பெரெரா இலங்கை அணியின் வருங்கால  டெஸ்ட் தொடர்களுக்காக பரீட்சிக்கப்படுகின்றாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. நடந்து முடிந்த இந்தியாவுடனான தொடரின் போது இலங்கை அணி 3வது போட்டியின் இரண்டாவது இனிங்ஸில் உபாதைக்குள்ளான சமரவிக்கிரமவை விடுத்து டில்ருவான் பெரெராவை ஆரம்ப வீரராக துடுப்பெடுத்தாட பணித்திருந்தது, இமாலய இலக்கை நோக்கி இலங்கை அணி விளையாடிய போது டில்ருவானை ஆரம்ப வீரராக அனுப்பியது சரியா என்கின்ற விமர்சன் எழுந்தது, இருப்பினும் இரண்டாவது இனிங்ஸில் 42 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்திருந்தார்.

  தற்போது இலங்கை நடைபெற்றுவரும் உள்ளூர் களக மட்ட போட்டிகளில் கோல்ட் அணித்தலைவராக ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கி 60 ஓட்டங்களைப்பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் முதல் இனிங்ஸில் 1 விக்கட்டையும் இரண்டாம் இனிஸில் 5 விக்கட்டுக்கலையும் கைப்பற்றியதோடு பெரெரா தலைமையிலான கோல்ட்ஸ் அணி இனிங்ஸ் மற்றும் 55 ஓட்டங்களால் புளூம்பீல்ட் அணியை வெற்றி கொண்டது குறிப்பிடத்தக்கதாகும்.

  மேற்கிந்திய தீவுகளின் நடசத்திர சுழற்பந்து வீச்சாளரான சுனில் நரைன் ஐபி.எல் மற்றும் பங்களாதேஸ் பிரிமியர் லீக் போட்டிகளில் கடைநிலை வீரராக அல்லாது வெவ்வேறு இடங்களில் கழமிறங்கி துடுப்பாடியமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

  இலங்கையின் டில்லி, ஸ்கூப் மன்னன் என வர்ணிக்கப்படும் திலகரட்ணே டில்சான், ஆரம்ப காலப்ப்குதியில் ரசல் ஆர்ணல்ட்டோடு ஜோடி சேர்ந்து 5ம் அல்லது 6ம் நிலைகளில் துடுப்பாட்ட பங்களிப்பை வழங்கியிருந்தார். நெதர்லாந்து அணியோடு இலங்கை அணி சர்வதேச சாதனையான ஒருநாள் அரங்கில் அதி கூடிய ஓட்டம் என்கின்ற சாதனையை நிகழ்த்திய போது சதம் கடந்திருந்தார், அதன் பின்னரான காலப்பகுதியில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக மட்டுமின்றி ஆரம்பந்துவீச்சாளராகவும் சிறப்பான திறமையை வெளிக்காட்டியிருந்தார். இதனடிப்படையில் ஓய்வு பெறும் வரை மூன்றுவிதமான போட்டிகளிலும் ஆரம்ப வீரராக கழமிறங்கி தனது துடுப்பால் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்திருந்தார்.

 டில்ருவான் பெரெராவை பொறுத்தமட்டில் 35 வயதான இவர் இன்னும் 2 அல்லது 3 வருடங்களில் இலங்கையை பிரதிநித்துவப்படுத்துவார் என நம்பப்படுகின்றது. தற்போதிருக்கும் டெஸ்ட் சுழற்பந்துவீச்சாளரைகளை பொறுத்த மட்டில் ரங்ஹண கேரத்திற்கு பக்கபலமாக இருக்கும் ஒரேயொரு வீரராக டில்ருவான் பெரெரா விளங்குகின்றார். கடந்த 2014ல் டெஸ்ட் அறிமுகத்தையும், 2007ல் ஒருநாள் அறிமுகத்தையும் மேற்கொண்ட பெரெராவுக்கு சிரேஸ்ட வீரர்களது ஆதிக்கத்தால் அணியில் சீரான வாய்ப்புக்கள் கிடைக்கவில்லை, இதனடிப்படையில் சுழல் ஜாம்பவானான் முத்தையா முரளிதரனின் ஓய்வின் பின்னர் ரங்ஹண ஹேரத்தும் மற்றும் டில்ருவான் பெரெரா ஆகியோர் மட்டுமே அணியின் சுழற்பந்துவீச்சிற்கு பக்கபலமாக இருக்கின்றார்கள். ஓரிரு வருடங்களில் ரங்ஹண ஹேர்த் ஓய்விற்கு பின், முழுநேர சிறப்பான சுழற்பந்துவீச்சாளரை இணங்காண வேண்டிய நிர்ப்பந்தத்தில் இலங்கை அணி உள்ளபோதும் தற்போது உள்ள சுழற்பந்து வீச்சாளர்களில் லக்ஸன் சந்தகண் மட்டுமே நம்பிக்கை கொடுப்பவராக இருக்கின்றார். இவர் தவிர மிலிந்த புஸ்ப குமார உள்ளூர் போட்டிகளில் அசாத்திய திறமையைக்காட்டிய போதிலும் சர்வதேச ரீதியில் சரியான வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இன்னமும் இலங்கை அணியின் தேடல்கள் தொடருகின்றது.

   டெஸ்ட் போட்டிகளில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக டிமுத் கருணாரத்தினே சோபித்து வருகின்ற போது அவருக்கு உறுதுணையாக இன்னொரு துப்பாட்ட வீரர் இன்னமும் உறுதியாக கிடைக்கவில்லை, கௌசல் சிலவாவிற்கு வாய்ப்புக்கள் வழங்கப்பட்ட போதும் அதனை பயன்படுத்த தவறியதால் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார். இதன் பின்னர் சந்தீர சமரவிக்கிரம இந்திய அணியில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக பரீட்சிக்கப்பட்ட போதும், வாய்ப்பை நழுவவிட்டிருந்தார். டில்ருவான் பெரெராவின் அனுபவம் மற்றும் கையாளும்திறமை ஆகியனவற்றினூடாக ஆரம்ப வீரராக களமிறங்கும் வாய்ப்பு இருக்கின்றது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை

Related posts: