ஐ.பி.எல். தொடரிலிருந்து டுமினி விலகல்!
Tuesday, March 21st, 2017
இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த தென்னாபிரிக்க அணியின் முன்னணி வீரர் ஜே.பி.டுமினி அணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
தனிப்பட்ட சொந்த காரணங்களுக்காக தொடரிலிருந்து விலகுவதாக இவர் டேர்டெவில்ஸ் அணி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார். இவர் கடந்த ஐ.பி.எல். போட்டித்தொடரின் போது டேர்டெவில்ஸ் அணியிக்கு 2 போட்டிகளுக்கு தலைமை தாங்கியுள்ளதுடன், டேர்டெவில்ஸ் அணி சார்பில் அதிக ஓட்டங்களை பெற்ற ஐந்தாவது வீரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் 38 போட்டிகளில் விளையாடி 1015 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்துள்ளார். இந்நிலையில் டுமினிக்கு பதிலாக மற்றுமொரு வீரரை களமிறக்க டேர்டெவில்ஸ் அணி முடிவெடுத்துள்ளது.
Related posts:
இந்தியா - ஜிம்பாப்வே மோதும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று!
மெத்தியூஸ், சந்திமால், ஹேரத் உட்பட 17 வீரர்கள் ஒப்பந்தத்தில் கைச்சாத்து!
இவர்களை போன்றவர்கள் தான் அணிக்கு தேவை: அரவிந்த டி சில்வா !
|
|
|


