4600 படை வீரர்கள் பணி நீக்கம்!
Sunday, June 19th, 2016இலங்கை இராணுவத்தில் இருந்து தப்பியோடிய 4600 படைவீரர்களை சட்ட ரீதியாக அவர்களது சேவையில் இருந்து பணிநீக்கம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை இராணுவத்தில் இருந்து 4229 படை வீரர்களும், கடற்படையினர் 206 பேர் மற்றும் 165 விமானப்படை வீரர்கள் ஆகியோர் சட்ட ரீதியாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் ஜயனாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னர் தப்பியோடிய வீரர்கள் எந்த தண்டனையும் இன்றி சேவையில் விலகிக் கொள்வதற்காக பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட பொது மன்னிப்பு காலத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில்,பொது மன்னிப்பு காலம் இம் மாதம் 13 ஆம் திகதி அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஏழை மக்களது வாழ்வியல் விடியலுக்காக உழைத்து வருபவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே - ஈ.பி.டி.பியின் யாழ்ப்ப...
மருத்துவர்கள் வேலைநிறுத்தம்!
குவைட்டில் இலங்கையர்களுக்கு அதிகளவு தொழில் வாய்ப்பு!
|
|