யாழ். மாவட்ட நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் மீண்டும் குறைப்பு!

Monday, May 30th, 2016

யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்துக்குரிய நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை 7 லிருந்து 6 ஆகக் குறைவடைந்துள்ளது.

2015ம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர்ப்பட்டியலில், 24 வாக்காளர்களின் எண்ணிக்கைக்குறைவினாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

2016ம் ஆண்டு வாக்காளர் பெயர்ப் பட்டியலுக்கான பதிவுகள் தற்போது இடம்பெற்று வருகின்ற நிலையில், இந்த ஆண்டு தகுதியுடைய சகலரையும் பதிவு செய்ய வைப்பதன்மூலம், இந்த எண்ணிக்கை மாற்றத்தைச் சரி செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

2015ம் ஆண்டு வாக்காளர் பெயர்ப் பட்டியலின் அடிப்படையில், யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் (யாழ்ப்பாணம்கிளிநொச்சி நிர்வாக மாவட்டங்களைஉள்ளடக்கியது) 5லட்சத்து 39 ஆயிரத்து 641 பேர் வாக்காளர்களாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பதிவு செய்யப்பட்ட வாக்காளர் எண்ணிக்கையின் அடிப்படையில் தேசிய ரீதியிலேயே நாடாளுமன்ற ஆசனங்கள் கணக்கிடப்படும். அதனடிப்படையில் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்துக்கு 6 ஆசனங்களே கிடைக்கப்பெற்றுள்ளன.

2014ம் ஆண்டு வாக்காளர் பெயர்ப் பட்டியலின் அடிப்படையில் 7 ஆசனமாக இருந்த யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டம், 2015ம் ஆண்டு பட்டியலின் அடிப்படையில் 6ஆசனமாகக் குறைந்துள்ளது. 2010ம் ஆண்டு வாக்காளர் மீளாய்வு மேற்கொள்வதற்கு முன்னதாக யாழ்ப்பாணத்தேர்தல் மாவட்டத்தில் 9 நாடாளுமன்ற ஆசனங்கள் இருந்தன.

மீளாய்வின் பின்னர் 6ஆசனங்களாகக் குறைவடைந்தது.பின்னர் 2012ம் ஆண்டுடன் அது 7 ஆக அதிகரித்தது.தற்போது மீளவும் குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

சயதொழிலுக்கான உதவிகளை மேற்கொண்டு தருமாறு நிதா கோகுலம் பெண்கள்நலன்புரி நிலையம் அமைப்பு ஈழ மக்கள் ஜனநா...
அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்துடன் இணைந்து, நாட்டின் அரச - தனியார் பங்குடமை நிறுவனங்கள் சிலவும் மர...
இன்றும் நாட்டின் பல இடங்களில் தொடரும் மழையுடனான காலநிலை – வளிமண்டலவியல் திணைக்கம் எதிர்வு கூறல்!