1660 பேருக்கு நிரந்தர நியமனம் – அமைச்சர் அகில விராஜ் காரியவசம்!
Thursday, May 4th, 2017மத்திய கலாசார நிதியத்தில் ஊழியர்களாக பணியாற்றிய 1660 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்க அமைச்சர் அகில விராஜ் காரியவசம் நடவடிக்கை எடுத்துள்ளார்.இவர்களில் பெரும்பாலானோர் மனிதவள நிறுவனத்தின் ஊடாக சேவைக்கு இணைத்துக் கொண்டவர்களாவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்திலிருந்து ஒவ்வொரு வருடமும் 500 ரூபா பணம் இந்த நிறுவனத்தால் நியாயமற்ற முறையில் பெற்றுக் கொள்ளப்பட்டதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இதனால் இந்த நிறுவனத்துடனான கொடுக்கல் வாங்கல்களை நிறுத்திக் கொள்வதற்கு மத்திய கலாசார நிதியம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த நிறுவனத்தின் கீழ் பணியாற்றிய ஊழியர்களில் எதிர்பார்க்கப்படும் தகுதிகளைக் கொண்ட ஊழியர்கள் மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். அமைச்சரின் பணிப்புரைக்கமைய இவர்கள், இம்மாதம் முதல் நிரந்தர சேவையில் நிரந்தர ஊழியர்களாக மத்திய கலாசார நிதியத்தில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள்.
Related posts:
|
|