14 இலங்கையருக்கு Interpol சிவப்பு அறிவித்தல்!

Saturday, March 16th, 2019

இலங்கைப் பிரஜைகள் 14 பேருக்கு எதிராக இன்டர்போல் இனால் சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச மட்டத்தில் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கே இவ்வாறு சிவப்பு அறிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச குற்றவியல் பொலிஸ் அமைப்பானது (interpol) இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இன்டர்போல் தகவல்களுக்கு அமைய நான்கு பேருக்கு விசேட சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதில், சஜீவ டி சொய்சா எனப்படும் ‘கொஸ்கொட சுஜீ, எமில் லக்ஷ்மி காந்தன், முனிசாமி தமசீலன், விக்னராசா செல்வநாதன் ஆகியோர் அடங்குகின்றனர்.

ஏனைய 10 பேருக்கும் எதிராக நாட்டின் எல்லை சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் சிவப்பு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: