தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையில் முறைகேடு – நோயாளர்கள் விசனம்!

Thursday, September 19th, 2019

தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையில் நோயாளா்களுக்கு வழங்கப்படும் பால் தரமற்றதாகவும் அதில் கூடுதலான அளவு தண்ணீரே இருப்பதாகவும் நோயாளா்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

புற்றுநோய் வைத்தியசாலையில் உள்ள நோயாளா்களுக்கு வழங்கப்படும் பால் நோயாளா்களின் ஆரோக்கியத்திற்காக வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் வைத்தியசாலைக்கு பால் வழங்கும் ஒப்பந்தம் எடுத்தவா்கள் இவ்வாறான முறைகேடிகளில் ஈடுபட்ட்டுவருவதாக நோயாளிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் இது தொடர்பில் உரியவா்கள் கவனமெடுக்க வேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை குறித்த விடயம் தொடர்பில் சமூக ஆர்வலர்கள் பலரும் விசனம் வெளியிட்டுள்ளதோடு இவ்வாறான செயல்களில் ஈடுபடுவோர்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் மேலும் தெரிவித்துள்ளனர்.

Related posts: