குடாநாட்டில் இந்தமுறை 130ஹெக்ரேயரில் உருளைக்கிழங்கு செய்கை – யாழ்.மாவட்ட விவசாயப் பணிப்பாளர்!

Saturday, February 18th, 2017

யாழ்ப்பாண மாவட்டத்தில் உருளைக்கிழங்குச் செய்கை 130 ஹெக்ரேயரில் மேற்கொள்ளப்பட்டுள்ளது விதை உருளைக்கிழங்கு கொள்வவனவுக்கு 50வீத மானியம் வழங்கப்பட்டது. என யாழ்.மாவட்ட விவசாயப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

சமுர்த்திப் பயனாளிகளுக்கும் வாழ்வாதார மேம்பாட்டு உதவியாக உருளைக்கிழங்குப் பயிர்ச் செய்கையில் ஈடுபட்ட குடும்பங்களுக்கும் ஊக்குவிப்புக் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டன. உருளைக்கிழங்கு அறுவடை நடைபெற்று வருகின்றது, பயிர்களில் நோய்த்தாக்கம் இல்லாத சீரான வளர்ச்சி நிலை காணப்பட்டதால் நல்ல விளைச்சல் கிடைத்துள்ளது.

யாழ்.மாவட்டத்தில் இந்த முறை ஆகக் கூடுதலான அளவு உருளைக்கிழங்குச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது உருளைக்கிழங்கு செய்கை கோப்பாய், தெல்லிப்பழை, உடுவில் பிரதேச செயலக பிரிவுகளில் பெருமளவில் செய்கை பண்ணப்பட்ட போதிலும், வடமராட்சி தென்மராட்சி தீவகம் உள்ளிட்ட ஏனைய பிரதேச செயலகப் பிரிவுகளிலும் செய்கை பண்ணப்பட்டன. சில புதிய இடங்களில் பரீட்சார்த்த அடிப்படையிலும் செய்கை பண்ணப்பட்டன. என்றார்.

625.0.560.320.160.600.053.800.500.160.60

Related posts: