வேலணை பிரதேச கட்சி பிரதிநிதிகளுடன் ஈ.பி.டி.பி.யின் முக்கியஸ்தர்கள் சந்திப்பு!

வேலணை பிரதேச பொதுச்சபை மற்றும் வட்டார நிர்வாக உறுப்பினர்களுடன் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் முக்கியஸ்தர்கள் சந்தித்து கட்சியின் எதிர்கால அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பில் அரசியல் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
இன்றையதினம் (25) கட்சியின் குறித்த பிரதேச நிர்வாக செயலாளர் கந்தையா ஞானமூர்த்தியின் ஒருங்கிணைப்பில் வேலணை பிரதேச அலுவலகத்தில் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன் தலைமையில் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது.
இந்த செயலமர்வின் போது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவினால் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் அரசியல் செயற்றிட்டங்கள் தொடர்பாகவும் கிராம மட்டங்களில் உருவாக்கப்பட்டுள்ள புதிய வட்டார ரீதியான கட்டமைப்புகளின் செயற்பாடுகள் தொடர்பாகவும் குறித்த பகுதியின் பிரமுகர்களுக்கு முக்கியஸ்தர்களால் தெளிவுபடுத்தப்பட்டது.
அத்துடன் கட்சியினால் எதிர்காலத்தில் மேற்கொள்ளவுள்ள பணிகள் மற்றும் அரசியல் முன்னகர்வுகள் தொடர்பாகவும் கட்சியின் முக்கியஸ்தர்களால் தெளிவுபடுத்தப்பட்டது.
இதன்போது கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம், கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன், கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன், கட்சியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன், ஆகியோர் உடனிருந்தனர்.
Related posts:
|
|