வெள்ள நிவாரணப் பணிகளில் இராணுவம்!
Monday, December 24th, 2018முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிப்படைந்த மக்களுக்கு மாவட்ட செயலகத்தின் அனுசரணையுடன் கிளிநொச்சி முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகங்களின் ஒத்துழைப்புடன் அனர்த்த பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரல்ப் நுகேரா வழிக்காட்டலின் கீழ் 57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய தலைமையில் கிளிநொச்சி பிரதேசங்களில் 7 ஆவது காலாட் படையணி 9 ஆவது விஜயபாகு காலாட் படையணி 1 ஆவது சிங்கப் படையணி, 15 ஆவது சிங்கப் படையணியைச் சேர்ந்த 230 படை வீரர்களது பங்களிப்புடன் இந்த அனர்த்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுருவழிக்காட்டலின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மணக்கண்டல் கவலாக்கண்டல் கோடைக்களு கேஜனகரத்னபுரம் வித்யாபுரம் உடையார்கட்டு குருவில்குளம் பிரதேசங்களில் இராணுவத்தினரால் இந்த அனர்த்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
Related posts:
|
|