பாதுகாப்பற்ற வகையில் காணப்படுகின்ற காணிகளை சுவீகரிப்பதற்கான நடவடிக்கை அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பு!

Sunday, June 18th, 2023

டெங்கு நோய் பரவும் வகையில், பாதுகாப்பற்ற வகையில் காணப்படுகின்ற காணிகளை சுவீகரிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அந்தவகையில் பாதுகாப்பற்ற காணிகள் வைத்திய அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்டால் அந்த காணிகள் சுவீகரிக்கப்படும் என நிர்வாக பொது சுகாதார பரிசோதகர் அஜித் விதானகே தெரிவித்துள்ளார்.

நாட்டில் அதிகரித்து வரும் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் நோக்கில், கொத்தட்டுவ சுகாதார வைத்திய பிரிவுக்கு மாத்திரம் பொருந்தும் வகையில் விசேட அவசர இலக்கமொன்று நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.

மேலும் கருத்து தெரிவித்துள்ள நிர்வாக பொது சுகாதார பரிசோதகர் அஜித் விதானகே,

“வழங்கப்பட்டுள்ள தொலைபேசி எண் மூலம் 24 மணி நேரமும் நடவடிக்கை எடுக்கப்படும், அதே நேரத்தில் தீர்வுகளை வழங்கக் கூடியவர்களுக்கு உடனடி தீர்வுகள் வழங்கப்படும். சில பிரச்சனைகளுக்கு 3 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

டெங்கு பரவும் வகையில் கைவிடப்பட்ட காணிகள் இருந்தால், அது பாதுகாப்பற்ற வகையில் காணப்படுவதாக சுகாதார வைத்திய அதிகாரி அடையாளம் கண்டால், அந்த நிலங்கள் கையகப்படுத்தப்படும்.” எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: