அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவினால் பொருளாதார சபைக்கு ஆலோசனை வழங்க விசேட குழு நியமனம்!

Tuesday, March 15th, 2022

தேசிய பொருளாதார சபைக்கு ஆலோசனை வழங்குவதற்காக 14 பேர் கொண்ட ஆலோசனைக் குழுவொன்றை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய போதே அமைச்சர் ரமேஷ் பத்திரன, இந்த ஆலோசனைக் குழுவை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் குறித்த ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்களாக,

பேராசிரியர் எச்.டி. கருணாரத்ன, பேராசிரியர் ஷிரந்த ஹீன்கெந்த, தம்மிக்க பெரேரா, கிருஷன் பாலேந்திரன், அஷ்ரோஃப் உமர், துஷ்னி வீரகோன், கலாநிதி ஹான்ஸ் விஜேசூரிய, விஷ் கோவிந்தசாமி, எஸ்.ரங்கநாதன், ரஞ்சித் பாகே, சுரேஷ் டி மெல், துமிந்த ஹுலங்கமுவ, சுஜீவ முதலிகே, பிரபாஷ் சுபசிங்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முன்பதாக உள்ளூர் பொருளாதாரக் கொள்கைகளை விவாதிப்பதற்கும், நாட்டின் பொருளாதாரத்தை நிர்வகிப்பதற்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் அண்மையில் 11 பேர் கொண்ட தேசிய பொருளாதார சபை நியமிக்கப்பட்டது.

தேசிய பொருளாதார சபையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன, நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரன, மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், அரச தலைவரின் செயலாளர் காமினி செனரத் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: