ஆட்பதிவு திணைக்கள பணிகள் வழமைக்கு!

Friday, December 16th, 2016

ஆட்பதிவுத் திணைக்கள்த்தின் கணிணித் தொகுதியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு நிவர்த்தி செய்யப்பட்டு பணிகள் வழமைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணிணித் தொகுதியில் நேற்று முன்தினம் ஏற்பட்ட கோளாறு காரணமாக தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொடுக்கும் ஒரு நாள் சேவை முழுமையாகப் பாதிப்டைந்நது. இதன் காரணமாக தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ள நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து ஆட்பதிவுத் திணைக்களத்துக்கு நேற்று முன்தினம் சென்றோர் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்தனர் என்று தெரிவிக்கப்பட்டது. எவ்வாறிருப்பினும், நேற்று முன்தினம் இரவு 8.30மணியளவில் இந்தத் தொழில்நுட்பக் கோளாறு நிவர்த்தி செய்யப்பட்டதாக ஆட்பதிவு திணைக்களத்தின் வழிநடத்தல் மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆணையாளர் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார். அத்துடன், நேற்று முன்தினம் விண்ணப்பிக்கப்பட்டிருந்த அனைத்து தேசிய அடையாள அட்டைகளும் தயாரிக்கப்பட்டுள்ளன என்றும் தகவல் தொழில்நுட்ப ஆணையாளர் ஹர்ஷ இலுக்பிட்டிய குறிப்பிட்டுள்ளார்.

Department-of-registration-persons

Related posts: