வாக்களித்த மக்களுக்கு நன்றி கூறுகிறோம் – ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் ஸ்ரீரங்கேஸ்வரன் !
Monday, August 10th, 2020நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு வாக்களித்த மக்களுக்கு எமது கட்சியின் சார்பில் நன்றி கூறுவதாக கட்சியின் யாழ் மாவட்ட உதிவி நிர்வாக செயலளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்தார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார் .
மேலும் அவர் தெரிவிக்கையில் – ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சி தமிழ் மக்களின் அரசியல் உரிமை, அபிவிருத்தி மற்றும் அன்றாட பிரச்சினைககளுக்கான தீர்’வு ஆகியவற்றை முன்னிலைப்படுத்தியே தமிழ் மக்களின் ஆணையை பெற்றுள்ளது .
அதுமட்டுமல்லாது இம்முறை வன்னி நிலப்பரப்பில் எமது கட்சி ஒரு ஆசனத்தை பெற்றுள்ளமையானது வன்னி மக்களுக்கு கிடைத்த மிகப்பெரும் வெற்றியாகும் .
அந்தவகையில் இனிவரும் காலங்களிலும் ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சியுடன் மக்கள் பயணிப்பதான் மூலம் தமது அபிலாசைகளை முழுமையாக வென்றெடுக்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
000
Related posts:
|
|