வவுனியாவில் கோர விபத்து – தந்தை – மகன் பலி – ஆத்திரமடைந்த மக்களால் பேருந்து தாக்கி சேதமாக்கப்பட்டது!

Sunday, March 6th, 2022

வவுனியா – குருக்கள் புதுக்குளம் பகுதியில் இன்று காலை பேருந்தொன்று உந்துருளியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் தந்தையும் மகனும் பலியாகினர்.

மன்னாரிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த தனியார் பேருந்தொன்று, குறுக்கு வீதியொன்றிலிருந்து இருந்து பிரதான வீதி நுழைந்த உந்துருளியுடன் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் உந்துருளியில் பயணித்த தந்தை சம்பவ இடத்திலேயே மரணித்ததுடன் காயமடைந்த மகன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் மரணித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், குறித்த பகுதியில் ஒன்று திரண்ட மக்கள் பேருந்தை தாக்கிச் சேதப்படுத்தியதையடுத்து அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அப்பகுதிக்கு காவல்துறையினர் மற்றும் விசேட அதிரடி படையினர் அழைக்கப்பட்டுள்ளனர். விபத்தில் 46 வயதான தந்தையும் 14 வயதான மகனுமே மரணித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை, காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: