வரும் செவ்வாயன்று ஒரு இலட்சத்து 85 ஆயிரம் ஸ்புட்னிக் V தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கும் – இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவிப்பு!

Tuesday, May 18th, 2021

இலங்கைக்கு ரஷ்யாவிடமிருந்து ஒரு இலட்சத்து 85 ஆயிரம் ஸ்புட்னிக் வீ தடுப்பூசிகள் கிடைக்கப்பெறவுள்ளன.

அத்துடன் அடுத்த செவ்வாய்கிழமை இவை இலங்கைக்கு கிடைக்கும் என்று இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவிடமிருந்து 6 இலட்சம் ஸ்புட்னிக் வீ தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியது.

அதன்படி முதற்கட்டமாக 15 ஆயிரம் ஸ்புட்னிக் வீ தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கப்பெற்ற நிலையில், அவற்றை செலுத்தும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

இந்தநிலையில் அடுத்தக்கட்டமாக இலங்கைக்கு ஒரு இலட்சத்து 85 ஆயிரம் தடுப்பூசிகள் அடுத்தவாரம் கிடைக்கப்பெறவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: