நாட்டின் மீது சேறு பூச சதித் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது – சிரேஸ்ட பிரதிக் காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன!

Tuesday, May 5th, 2020

நாட்டின் மீது சேறு பூசும் வகையில் சர்வதேச சதித் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக சிரேஸ்ட பிரதிக் காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன சிங்கள நாளிதழ் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள நிலைமையில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் சட்டவிரோதமானது எனக் கூறி நாட்டின் மீது சேறு பூச முயற்சிக்கப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

இரகசியமாக முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த சதித் திட்டம் பற்றிய தகவல்கள் கிடைக்கப் பெற்று வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் முன்னெடுத்து வரும் வெற்றிகரமான நடவடிக்கைகள் குறித்து சர்வதேச ரீதியில் வரவேற்பு வெளியிடப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் காழ்ப்புணர்ச்சியில் போலிப் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கு அமையவே ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோன வைரஸ் தொற்றை இல்லாதொழிப்பதற்கு சரியான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்

Related posts: