ஈழத்தின் மூத்த ஆன்மீகவாதியும்,குப்பிளான் தந்த பெண் புலவருமான விசுவாம்பா விசாலாட்சி மாதாஜி அம்மையாரின் பூதவுடல் திருமுறை ஓத தீயுடன் சங்கமம்

Tuesday, March 8th, 2016

ஈழத்தின் மூத்த ஆன்மீகவாதியும்,குப்பிளான் தந்த பெண் புலவருமான விசுவாம்பா விசாலாட்சி மாதாஜி அம்மையாரின் பூதவுடல் இன்று திங்கட்கிழமை(07-03-2016)  பிற்பகல் 2.30 மணியளவில் திருமுறை ஓதுதலுடன் அக்கினியுடன் சங்கமமானது.

வடலூர் இராமலிங்க வல்லாளரிடம் ஞான சமயதீட்சை பெற்று ‘மாதாஜி’ என்ற திருநாமம் கைவரப் பெற்ற இவர் எல்லோராலும் மாதாஜி அம்மா என அன்புடன் அழைக்கப்பட்டார். இதுவரை 30 இற்கும்  மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ள  அம்மையார் ஓய்வு பெற்ற ஆசிரியர் என்பதுடன் முதுபெரும் ஈழத்துப் புலவராகவும் விளங்குகிறார்.  பல விருதுகளையும், பட்டங்களையும் பெற்றுள்ள அம்மையார் ஈழத்துச் சித்தர் தவத்திரு சிவயோக சுவாமிகளைத் தமது மானசீகக் குருவாக அடைந்து உபதேசம் பெற்றவருமாவார்.

Related posts: