வன்முறை கும்பலால் நவாலி பகுதியில் முச்சக்கர வண்டி தீக்கிரை!

யாழ்ப்பாணம் நவாலி பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று வன்முறை கும்பலால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
நவாலி, ஆனந்தா வீதி பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த 06 பேர் கொண்ட வன்முறை கும்பல் ஒன்று வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த முச்சக்கர வண்டியை அடித்து நொறுக்கிவிட்டு அதற்கு தீ வைத்த பின்னர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதனை அடுத்து , பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
Related posts:
மருத்துவ சபைக்கு GMOA உறுப்பினர்கள்!
5400 பஸ்களை சேவையில் - இலங்கைப் போக்குவரத்துச் சபையின் அதிரடி!
பல்கலைக்கழக மாணவர்கள் பாவம் ஏமாற்றப்பட்டு விட்டார்கள் – வடமாகாண முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் தவராசா!
|
|