வட பிராந்திய பிரதான பிராந்திய முகாமையாளராக குலபாலசெல்வம் நியமனம்!

Friday, April 23rd, 2021

இலங்கை போக்குவரத்து சபையின் வட பிராந்திய பிரதான பிராந்திய முகாமையாளர் செல்லத்துரை குலபாலசெல்வம் பதவியேற்றுக்கொண்டுள்ளார்.

நீண்டகாலமாக பெரும் இழுபறி நிலைக்குள் இருந்துவந்த குறித்த பதவிநிலைக்கான நியமனத்திலிருந்து வந்த சர்ச்சை இதனூடாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

ஊழியர்களின் நன்பதிப்பை பெற்றிருந்த நிலையில் அவர்களது விருப்புகளுக்கு அமைய குறித்த பதவியை ஏற்றதாக  தெரிவித்துள் குணபாலச்செல்வம் தன்னை வடபிராந்திய பிரதான முகாமையாளராக நியமித்தமைக்கு கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் போக்குவரத்துதுறை அமைச்சர் காமினி லொக்குகே, இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, இ. போ.ச தலைவர் கிங்கிலி ரணவக்க உள்ளிட்ட பலருக்கும் தனது நன்றிகளை தெரிவித்துள்மை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: