பல்கலைக்கழகங்களை திறப்பது குறித்து இன்றும் தீர்மானிக்கவில்லை – கல்வி அமைச்சு!

Sunday, April 4th, 2021

பல்கலைக்கழகங்களைத் திறப்பது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கான விடுதிகள் தொடர்பில் நிலவி வரும் பிரச்சினை காரணமாகப் பல்கலைக்கழகங்களைத் திறப்பது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளது.

கோவிட் வைரஸ் தொற்று காணப்படுவதனால் விடுதிகளில் பெரும் எண்ணிக்கையிலான மாணவ மாணவியர் தங்கியிருப்பது ஆபத்தினை ஏற்படுத்தக் கூடும் என்ற காரணத்தினால் பல்கலைக்கழகங்களைத் திறப்பது குறித்து தீர்மானம் எடுக்கப்படவில்லை.

எவ்வாறெனினும் நீண்ட காலத்திற்குப் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டிருக்காது எனக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது

Related posts: