நாடளாவிய சேவையாக தாதியர் சேவையை மாற்றுமாறு பணிப்பு – அமைச்சர் ராஜித!

Thursday, February 15th, 2018

நாடளாவிய சேவைகளில் ஒன்றாக தாதியர் சேவையை மாற்றியமைக்குமாறு சுகாதார மற்றும் ​போசணை அமைச்சர் ராஜித சேனாரத்ன உத்தரவிட்டுள்ளார்.

சுகாதாரத்துறையின் முக்கிய சேவைகளில் ஒன்றான தாதியர் சேவை இதுவரை நாடளாவிய ரீதியான சேவையாக பிரகடனப்படுத்தப்படவில்லை. இதன் காரணமாக தாதியர் தொழிலில் உள்ளவர்கள் அந்தந்த மாகாணங்களுக்குள் மாத்திரமே இடமாற்றல் பெறுவதற்கான வாய்ப்பு காணப்பட்டது.

இந்நிலையில் தாதியர் சேவையையும் நாடளாவிய சேவைகளில் ஒன்றாக மாற்றியமைக்க சுகாதார அமைச்சுடன் மாகாண சுகாதார அமைச்சர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். எனவே உடனடியாக அதனை நடைமுறைக்குக் கொண்டுவருமாறு சுகாதாரசேவை அதிகாரிகளுக்கு அமைச்சர் ராஜித சேனாரத்ன பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன் மூலம் கிராமிய மருத்துவமனைகள் உள்ளிட்ட அரசாங்கத்தின் அனைத்து மருத்துவமனைகளிலும் தாதியர்களின் நியமனங்கள் மற்றும் இடமாற்றங்கள் என்பன மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரப்படவுள்ளது.

Related posts: