வடமாகாண விவசாய பயிற்சி நிலையத்தில் பருவகால தொழிலாளர்கள் நிரந்தர நியமனம் பெற்றுத்தருமாறு ஈ.பி.டிபி யிடம் கோரிக்கை!

Thursday, January 21st, 2021

வடமாகாண விவசாய பயிற்சி நிலையத்தில் பருவகால தொழிலாளர்களாக பல வருடங்கள் பணியாற்றி வந்திருந்த நிலையில் தற்போது தாங்கள் இப்பணிநிலையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளமையால் தமது வாழ்வாதாரம் பறிபோகும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியிடம் முறையிட்டுள்ளதுடன் அப்பதவிக்கு தம்மை நிரந்தரமாக்கி தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இன்றையதினம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட தலைமை அலுவலகத்துக்கு வருகைதந்திருந்த குறித்த பயிற்சி நிலையத்தால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள்  கட்சியின் யாழ் மாவட்ட நியாக செயலளர் சிவகுரு பாலகிருஸ்னனிடம் தமது பிரச்சினைகள் தொடர்பில்  தெரிவித்திருந்தனர்.

இதன்போது தாம் குறித்த சேவையை கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கொண்டு வந்திருந்த நிலையில் இதுவரை நிரந்தர நியமனத்துக்குள் உள்வாங்கப்படாத நிலையில் பணியாற்றி வந்திருந்த போதும் தற்போது குறித்த பணிநிலையிலிருந்து எம்மை விவசாய பயிற்சி நிலையம் இடை நிறுத்தியும் உள்ளதாகவும் தெரிவித்தனர்..

அத்துடன் தற்போது நாட்டை அச்சுறுத்திவரும் கொரோனா தொற்றின் அபாய நிலைக்குள்ளும் தாம் விவசாய உற்பத்தி வேலைகளை செய்து வந்திருந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு ஆரம்பமானதிலிருந்து அப்பணியில் இருந்து தாம் நிறுத்தியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியிருந்ததுடன் எமது குடும்ப நிலைமையை கருத்தில் கொண்டு அப்பதவி நிலைக்கு தங்களை நிரந்தரமாக்கி தருமாறும் கோரிக்கை விடுத்தனர்.

இதன்போது குறித்த தொழிலாளர்களது பிரச்சினைகளை ஆராய்ந்தறிந்துகொண்ட கட்சியின் மாவட் நிர்வாக செயலாளர் பாலகிருஸ்ணன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்துக்கு குறித்த விடயத்தை கொண்டு சென்று அதற்கான நிரந்தர தீர்வுகளை பெற்றுத்தருவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதன்போது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நல்லூரல் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம் ரவீந்திரதாசன் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: