வடமாகாணத்தில் கொரோனா நோயாளர்களுக்காக புதிய வைத்தியசாலை – யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவிப்பு!

Saturday, April 25th, 2020

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான விசேட மருத்துவமனை ஒன்று வடக்கு மாகாணத்தில் நிறுவப்படவுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த திட்டத்திற்கான  நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டிருப்பதாகவும் யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

மேலும் வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றுக்கு அடையாளம் காணப்பட்டவர்களை இதுவரை நாங்கள் வெலிகந்த மற்றும் இரணவில போன்ற வைத்தியசாலைகளுக்கே அனுப்பிவருகின்றோம்.

எனவே வடமாகாணத்தில் குறித்த வைத்தியசாலையை அமைக்க மாகாண சுகாதார அமைச்சு தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றது.இதன்படி வடக்கில் உள்ள ஒரு வைத்தியசாலையை தேர்வு செய்து அதனை கொரோனாவுக்கு சிகிச்சையளிப்பதற்கான விசேட வைத்தியசாலையாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்

Related posts: