ரூமேனியா – இலங்கை  இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த நடவடிக்கை!

Sunday, July 9th, 2017

ரூமேனியாவுடனான இருதரப்பு தொடர்புகள் மேலும் வலுப்படுத்தப்படும் என்று வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர, சமீபத்தில் ரூமேனியாவுக்கான உத்தியோகபூர் விஜயத்தில் ஈடுபட்டிருந்தார். இந்த விஜயத்தின்போது சர்வதேச தொடர்புகள் இராஜாங்க செயலாளர் மொனிக்கா ஜியோனிக்காவை சந்தித்த வேளையில் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

இலங்கைக்கும், ரூமேனியாவுக்கும் இடையிலான இராஜதந்திர தொடர்புகளுக்கு தற்சமயம் 60 வருடங்கள் நிறைவடைந்துள்ளன.  இது தொடர்பில் இங்கு கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. பொருளாதாரம், கல்வி, கலாசாரம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

மின்சக்தி மற்றும் எரிசக்தி, கிராமிய அபிவிருத்தி, விவசாயம், சுகாதாரம் நிதி மற்றும் வங்கி அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பிலான புரிந்துணர்வை விரிவுபடுத்துவது குறித்தும் பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts: