பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தால் தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொள்ள முடியாதோருக்கு அடையாள அட்டைகளை வழங்க விசேட வேலைத்திட்டம்!
Tuesday, August 29th, 2023
பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தால் தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்ள முடியாதோருக்கு அடையாள அட்டைகளை வழங்கும் வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
40 வயது பூர்த்தியடைந்தவர்களுக்காக இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு, அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்தி தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில், குறிப்பிட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவில் நிரந்தர வதிவிடத்தைக் கொண்ட, வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ள 40 வயதுக்கு மேற்பட்ட இலங்கை பிரஜைகள் இதற்கு விண்ணப்பிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
வஞ்சனை செய்வாரடி கிளியே! அவர் வாய்ச் சொல்லில் வீரரடி!!
மாணவர்களுக்கான இரண்டாம் தவணை விடுமுறை அறிவிப்பு!
ஆசிரியர்களுக்கு தடுப்பூசி வழக்கும் நடவடிக்கையின் பின்னர் ஆகஸ்டில் பாடசாலைகளை ஆரம்பிக்க எதிர்ப்பார்ப்...
|
|
|


