யாழ்.மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி – முன்பதிவை மேற்கொள்ள மாவட்ட செயலர் அழைப்பு!

Wednesday, October 13th, 2021

யாழ்.மாவட்டத்தில் 432 பேருக்கு பைசர் தடுப்பூசி வழங்கப்பட்டிருப்பதாக யாழ்.மாவட்டச் செயலர் தெரிவித்துள்ளார்.

மாவட்டத்திலுள்ள விசேட தேவையுடையோர், மற்றும் நீண்ட நாள் நோய் வாய்ப்பட்டோருக்காக வழங்கப்படும் பைசர் தடுப்பூசி சுமார் 432 பேர் வரை வழங்கப்பட்டுள்ளது.  அரசாங்கத்தினால் அறிவுறுத்தப்பட்ட விசேட தேவையுடையோர் மற்றும் நீண்ட நாள் நோய்களுக்கு உள்ளவர்களுக்கான தடுப்பூசிகள் தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

அடுத்த கட்டமாக பாடசாலை மாணவர்களுக்கான பைசர் தடுப்பூசிகள் வழங்கும் ஏற்பாடுகளை சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகின்றார்கள்.  ஆகவே தடுப்பூசிகளை இதுவரை பெறாதோர் தெரிவு செய்யப்பட்ட வைத்தியசாலையில் முன்பதிவு செய்து வைத்திய ஆலோசனையுடன் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: