யாழ் நகர் நவீன சந்தை கடைத்தொகுதியை 24 மணிநேரமும் திறக்க நடவடிக்கை!

Tuesday, October 23rd, 2018

யாழ் நகரின் நவீன சந்தை கட்டட தொகுதியின் உள் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களின் வசதிக்காக கட்டடத் தொகுதி இரவு ஒன்பது மணி வரைக்கும் திறந்து இருக்கும் என்று மாநகராட்சி மன்றம் தெரிவித்தது.

அதனைவிட சனிக்கிழமைகளில் இக்கட்டடத் தொகுதி இரவு 9.30 மணி வரைக்கும் திறந்திருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

நவீன சந்தை கட்டடத் தொகுதியில் பாதுகாப்பு கடவை பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் இரவு 9 மணிக்கு முன்பாக மூடப்படுகின்றது. இதன் காரணத்தினால் நவீன சந்தையின் உட்புறத்தில் உள்ள வர்த்தக நிலையங்களும் நேரம் முந்தி மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது உட்புறத்தில் உள்ள வர்த்தக நிலையங்களின் வசதி கருதி இரவு 9 மணி வரை இக்கட்டடத் தொகுதி திறந்து இருக்கும். அதேசமயம் இந்த கட்டடத் தொகுதியில் உள்ள மலசல கூடங்களின் புனரமைப்பு மற்றும் நிர்மாணப் பணிகள் நிறைவுற்றதும் கட்டடத் தொகுதிகளை தொடர்ந்து 24 மணி நேரமும் திறந்து விடுவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சபை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts: