யாழ். கல்வி வலயத்தில் மேலதிகமாக இருக்கும் 46 ஆசிரியர்கள் உடனடி இடமாற்றம்!

Tuesday, November 27th, 2018

யாழ்ப்பாண கல்வி வலயத்துக்கு உட்பட்ட பாடசாலைகளில் தேவையான ஆளணிக்கும் அதிகமாக இருந்த 46 ஆசிரியர்கள் போதிய ஆசிரியர்கள் இல்லாத பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம் கல்வி அமைச்சுக்குப் பயணம் மேற்கொண்ட வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே யாழ்ப்பாண கல்வி வலயப் பாடசாலைகளின் அதிபர்களை அழைத்துக் கலந்துரையாடினார். இந்தக் கலந்துரையாடலின் போது சில பாடசாலைகளில் தேவைக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிவது கண்டறியப்பட்டது.

இதையடுத்து அவ்வாறான ஆசிரியர்களை கஸ்டப் பிரதேச பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர் குறைபாட்டை நிவர்த்தி செய்யப் பயன்படுத்தும்படி ஆளுநர் கல்வி அமைச்சின் செயலர் எஸ்.சத்தியசீலனுக்குப் பணித்திருந்தார். இதையடுத்து உடனடியாக நடைமுறைக்கு வரும்வகையில் இந்த மாற்றம் இடம்பெற்றது.

Related posts: