முழுமை பெறவுள்ள அனலைதீவு பகுதிக்கான மின்சார விநியோகம்!

Thursday, June 16th, 2016

டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட முயற்சியின் பயனாக அனலைதீவு பகுதிக்கான மின்விநியோக வேலைத்திட்டங்கள் துரித கதியில் நடைபெறுவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இம்மாதம் 11 ஆம் திகதி கட்சியின் யாழ்.மாவட்ட நிர்வாக செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன் (வி.கே.ஜெகன்) தலைமையிலான குழுவினர் அனலைதீவுக்கு சென்றிருந்த சமயம் இதுவரையில் மின்சாரம் கிடைக்கப்பெறாத மக்கள் தமக்கான மின் இணைப்புகளை துரிதமாக வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கைவிடுத்திருந்தனர்.

மக்களின் கோரிக்கையினை செவிமடுத்த குழுவினர் மேற்படி விடயத்தை டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தனர்.

இவ்விடயம் தொடர்பாக துறைசார்ந்தோருடன் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடியதன் பயனாக அனலைதீவுக்கான மின்சார விநியோக வேலைத் திட்டங்களை இலகுபடுத்தும் துரிதப்படுத்தும் நோக்கில் எழுவைதீவில் இருந்த பாரந்தூக்கி இயந்திரம் கடற்படையின் உதவியுடன் அனலைதீவுக்கு கொண்டுவந்து சேர்க்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அடுத்த சில தினங்களில் இலங்கை மின்சார சபையின் வேலைத்திட்டங்கள் தொடங்கப்படவுள்ளதாக எமது அலுவலக செய்தியாளர் மேலும் தெரிவித்துள்ளார்

EPDP 1 (1)

EPDP 1 (2)

Related posts: