மீண்டும் 2 ஆயிரத்தை கடந்த தொற்றாளர் எண்ணிக்கை !
Friday, July 30th, 2021
நாட்டில் கடந்த 36 நாட்களுக்குப் பின்னர் இலங்கையில் மீண்டும் ஒரேநாளில் 2000 க்கும் அதிகமானோர் கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
அதனடிப்படையில் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 329 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானது. அவர்களில் 41 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களன்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் நாட்டில் கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை 3 இலட்சத்து 41 ஆயிரத்து 202ஆக உயர்ந்துள்ளது. இதில் 26 ஆயிரத்து 448 பேர் கொவிட் தொற்றுக்காக சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related posts:
வெளிநாட்டில் 196 இலங்கை பெண்கள் பலி - வெளிவிவகார அமைச்சு!
யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் இன்று மின்தடை
பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு திட்டம் - உலக உணவுத் திட்டத்தால் வழங்கப்பட்ட உணவுப் பொருட்க...
|
|
|


