வித்தியாவின் வழக்கில் நீதாய தீர்ப்பாயத்தின் முன்னிலையில் ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.எம்.ரியால் சாட்சியம்

Monday, July 24th, 2017

கூட்டுவன்புணர்விற்குட்படுத்தி படுகொலை செய்யப்பட்ட மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் வழக்கில் நீதாய தீர்ப்பாயத்தின் முன்னிலையில் ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.எம்.ரியால் சாட்சியளித்துள்ளார்
யாழ்.மேல் நீதிமன்றில் நீதாய தீர்ப்பாயத்தின் மூன்றாம் கட்ட விசாரணைகள் இன்று திங்கட்கிழமை  (24) யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், திருகோணமலை நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பா.சசி மகேந்திரன் தலைமையில் கூடியது.
வழக்கு விசாரணையின் போது, 7 பேர் மன்றில் சாட்சியாளர்களாக முன்னிலைப்படுத்தப்பட்ட போது, முதல் சாட்சியாக ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.எம்.ரியால் 24வது சாட்சியாக சாட்சியமளித்தார். இதே போன்று 4 சாட்சிகளின் வாக்குமூலங்கள் எதிரிகளின் வாக்குமூலத்தினைப் பதிவுசெய்தேன்.

அனைத்து சாட்சிகளின் வாக்குமூலங்களும்  வாக்குமூலத்தினை ஊர்காவற்துறை நீதிமன்றில் உள்ள நீதவானின் சமாதான அறையில் வைத்து பதிவுசெய்தேன் என்றும் மன்றில் சாட்சியமளித்தார். குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் சத்தியகடதாசியை சட்டமா அதிபர் திணைக்களத்தினால் அனுப்பி வைக்கப்பட்டது. சாட்சிக்கு வாசிக்கத் தெரியாத காரணத்தினால், உரத்த குரலில் வாசித்து காட்டியபோது, நீதிமன்ற பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் சிறைச்சாலை உத்தியோகத்தர் முன்னிலையில் 22.02.2017 அன்று கையொப்பமிட்டார். அன்றையதினமே சத்தியகடதாசி சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் மன்றில் சாட்சியமளித்தார்.

Related posts: