புலிகள் அமைப்பை சேர்ந்த போராளி ஒருவரின் மகளுக்கு ஈ.பி.டி.பியின் யாழ் மாநகரசபை உறுப்பினர் றெமீடியஸ் துவிச்சக்கர வண்டி வழங்கிவைப்பு!
Wednesday, November 14th, 2018வறிய நிலையில் வாழும் முன்னாள் போராளிகளின் குடும்ப வாழ்வாதார மேம்பாட்டுக்காக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகரசபை உறுப்பினரும் பிரபல சட்டத்தரணியுமான முடியப்பு றெமீடியஸ் தனது மாநகரசபை உறுப்பினர் பதவிக்கான இம்மாதத்திற்குரிய மாதாந்தக் கொடுப்பனவை விடுதலைப் புலிகளின் அமைப்பிலிருந்து மரணமடைந்த போராளி ஒருவரின் குடும்பத்தை சேர்ந்த மாணவி ஒருவரின் கற்றல் செயற்பாடுகளை மேம்படுத்துவதற்காக துவிச்சக்கரவண்டி ஒன்றை வழங்கிவைத்துள்ளார்.
யாழ் மாநகர சபையின் அனைத்து உறுப்பினர்களும் தத்தமது பங்களிப்பை ஓரளவேனும் அவர்களுக்கு வழங்கவேண்டும் என்றும் யாழ் மாநகர சபையின் கன்னி அமர்வில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மற்றுமொரு மாநகரசபை உறுப்பினர் றீகன் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் அது சபையில் ஏற்றுக்கொள்ளப்படாதிருந்தது.
இந்நிலையில் தமது பிள்ளைகளின் படிப்பை முன்னெடுத்துச் செல்ல முடியாத வறிய நிலையில் வாழ்ந்துவந்த கொய்யாத்தோட்டத்தைச் சேர்ந்த வேதநாயகம் தாசியஸ் என்பவரின் மகள் மேரி ஸ்ரலானி அண்மையில் வெளிவந்த புலமைப்பரிசில் பரீட்சையில் 168 புள்ளிகளை பெற்று சித்தியடைந்திருந்தார்.
வறிய நிலையில் வாழ்ந்துவந்த குறித்த மாணவியின் கல்வி நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுத்து செல்லப்பட வேண்டும் என்ற நோக்கில் சட்டத்தரணி றெமீடியஸ் குறித்த மாணவியின் பாடசாலை போக்குவரத்து தேவைக்காக துவிச்சக்கர வண்டி ஒன்றை அன்பளிப்பாக வழங்கியிருந்தார்
குறித்த மாணவி விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னணி தலைவர்களில் ஒருவரான கிட்டுவுடன் கடலில் சாவடைந்த ஜீவா என்பவரின் சகோதரியின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்போது கட்சியின் யாழ் மாநகரசபை உறுப்பினர்கள் உடனிருந்தனர்.
Related posts:
|
|