ஊடக சுதந்திர சுட்டியில் இலங்கை முன்னேற்றம்!

Friday, January 4th, 2019

உலக பத்திரிகைச் சுதந்திர நிறுவனம் (வேள்ட் ப்ரெஸ் ப்ரீடம்) வெளியிட்டுள்ள அறிக்கைக்கு அமைய 2017 ஆம் ஆண்டில் 141 ஆவது இடத்தில் இருந்த இலங்கை 2018 ஆம் ஆண்டில் 131 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இந்தச் சுட்டியின்படி உலகில் ஊடக சுதந்திரம் கூடுதலாக உள்ள நாடு நோர்வே ஆகும்.

ஊடக சுதந்திரம் மிகவும் குறைவாக உள்ள நாடு எரித்திரியாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தெற்காசியாவில் இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகள் மிகவும் கீழ் மட்டத்தில் இருக்கின்றன.

அதேவேளை மாலைதீவு, ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகள் இலங்கையையும் விட மேலிடத்தில் உள்ளன.

இந்த சுட்டியில் 94 ஆவது இடத்தில் உள்ள பூட்டான் தெற்காசியாவில் ஊடக சுதந்திரத்தை கூடுதலாகப் பேணும் நாடாக அமைந்துள்ளது.

Related posts: