உயர்தரப் பரீட்சை முடிவு வெளியாவதில் தாமதம் ஏன்? விசாரணை நடத்தக் கோரிக்கை!

Friday, December 30th, 2016

2016ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபெறுகள் தாமதமாவது தொடர்பாக விரைவில் விசாரணை நடத்த வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

அச்சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கையெழுத்துடன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபெறுகள் அதே வருடம் டிசம்பர் மாதம் வெளியிடப்பட்ட நிலையில்? 2015ஆம் ஆண்டுக்கான பெறுபேறுகள் 2016 ஜனவரி 2ஆம் திகதியே வெளியானதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வருடாந்தம் பெறுபேறுகள் இவ்வாறு தாமதமடைவதாகவும் இதனால் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் தேசிய பரீட்சைகள் தொடர்பில் இதுபோன்ற நிலமை ஏற்பட்டுள்ளதாவது பாரிய பிரச்சினை எனக் குறிப்பிட்ட அவர், பரீட்சை பெறுபேறுகள் தாமதமடைவது பற்றிய உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தமது சங்கம் பிரதமர் மற்றும் ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதேவேளை, இம்முறை உயர்தரப் பர்Pட்சைப் பெறுபேறுகளை விரைவில் வெளியிட நடவடிக்கை எடுக்குமாறும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

exam-626x380

Related posts: