முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடையை நீக்கியது கொழும்பு மேல் நீதிமன்றம்!

Monday, November 23rd, 2020

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு வெளிநாடுகளுக்கு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையை கொழும்பு மேல் நீதிமன்றம் நீக்கியுள்ளது.

இதனை அடுத்து விதிக்கப்பட்ட பயணத் தடையை நீக்குமாறு அதிகாரிகளுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போது, திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்துக்கு சொந்தமான நிதியை முறைக்கேடாக பயன்படுத்தியதாக கூறப்படும் சம்பவத்தில் அவருக்க வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: