முதலாம் தவணை கற்றல் செயற்பாடுகள் இன்றுமுதல் ஆரம்பம் – தரம் ஒன்று மாணவர்களை இணைந்துக் கொள்ளும் நடைமுறை 19 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாகவும் அறிவிப்பு!

Monday, April 18th, 2022

நாடளாவிய ரீதியிலுள்ள சகல அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் இவ்வாண்டுக்கான முதலாம் தவணை கற்றல் செயற்பாடுகள் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ளன..

எவ்வாறிருப்பினும் இன்றுமுதல் பாடசாலை நேரத்தினை ஒரு மணித்தியாலத்தினால் அதிகரிப்பதற்கு எடுக்கப்பட்டிருந்த தீர்மானம் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதற்கமைய கல்வி அமைச்சினால் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள சுற்று நிரூபத்திற்கமைய சகல சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளில் முதலாம் தவணை கற்றல் செயற்பாடுகள் இன்றுமுதல் மே மாதம் 20 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே 2022 ஆம் ஆண்டுக்கான முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைந்துக் கொள்ளும் நடைமுறை எதிர்வரும் 19 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக  கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நாடு பூராகவும் உள்ள அரச பாடசாலைகளின் அதிபர்களுக்கு அறிவித்துள்ளதாக கல்வி அமைச்சின் பாடசாலைகள் தொடர்பான மேலதிக செயலாளர் லலிதா எகொடவெல தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: