நீர்வளப் பிரதேசங்களை பாதுகாப்பதற்கு உடனடி நடவடிக்கை – துறைசார் அதிகாரிகளுக்கு பிரதமர் பணிப்பு!

Thursday, July 29th, 2021

நாடு முழுவதும் அனைத்து மக்களுக்கும் குடிநீரை பெற்றுக்கொடுக்கும் திட்டத்தை துரிதப்படுத்துவதற்கு அமைவாக நீர்வளப் பிரதேசங்களை பாதுகாப்பதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ துறைசார் தரப்பினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

நீர் வழங்கல் அமைச்சின் அதிகாரிகளுடன் அலரி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய நீர்வளப் பிரதேசங்களை பாதுகாப்பதற்கு சுற்றாடல்துறை அமைச்சுடன் இணைந்து வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்குமாறு பிரதமரால் நீர் வழங்கல் அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதன்போது பிரதமர் மேலும் கூறுகையில் –

நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு குடிநீரை பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டத்தை நாம் துரிதப்படுத்த வேண்டும். குடிநீர் இன்மையால் வறண்ட பிரதேச மககள் பாரிய இன்னல்களுக்கு முகங்கொடுக்கின்றனர்.

இந்த குடிநீர் திட்டங்களுக்காக வெளிநாட்டு நிதி உதவிகளையோ அல்லது மானியங்களையோ பெற்றுக் கொள்ள முடியும்.

இதுவரை நாடளாவிய ரீதியில் அனைத்து கிராம சேவகர் பிரிவுகளையும் உள்ளடக்கும் வகையில் குழாய் மூலமான பாதுகாப்பான குடிநீரை பெற்றுக்கொடுக்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய எதிர்வரும் 3 வருட காலப்பகுதியில் அனைத்து குடும்பங்களுக்கும் சுத்தமான குடிநீரை பெற்றுக் கொடுக்க முடியும் என எதிர்பார்ப்பதாகவும் நீர் வழங்கல் அமைச்சின் அதிகாரிகள் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: