இலங்கையில் புகழ்பெற்ற அரசியல்வாதிகள் அனைவரும் பட்டதாரிகள் இல்லை – புத்திக பத்தரன!

Wednesday, September 11th, 2019

எதிர்காலத்தில் ஒழுக்கமான மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்வது, மக்களின் பிரதான கடமை என இராஜாங்க அமைச்சர் புத்திக பத்தரன தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் கூறுகையில்

இலங்கையில் புகழ்பெற்ற அரசியல்வாதிகள் அனைவரும் பட்டதாரிகள் இல்லை. அப்படியான தலைவர்கள் நாட்டில் முன்னேற்றத்திற்கு பங்களிப்பு செய்துள்ளனர். தற்காலம் கடந்த காலத்தை விட மிகவும் வேறுபட்டது. சாராயம் விற்பனை செய்வோரே அதிகளவில் மக்கள் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த அரசியல்வாதிகளே பாடசாலைகளுக்கு சென்று ஒழுக்கம் பற்றி பேசுகின்றனர். இதுவே சிக்கலுக்குரியது. இதனால், மக்கள் தமது கிராமங்களுக்காக பொறுப்பாக தமது புள்ளடிகளை இட வேண்டும்.

மக்கள் தமது வாக்குகளின் மூலம் நம்பிக்கையான பெறுமைக்கொள்ளக்கூடிய அரசியல்வாதிகளை தெரிவு செய்ய வேண்டும். இந்த சந்தர்ப்பத்தில் கட்சியோ, அரசியல் நிலைப்பாடோ அவசியமில்லை என குறிப்பிட்டுள்ளார்.

Related posts: