படையினர் வெளிநாடு செல்ல அறிவிக்க வேண்டியதில்லை – குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர்!

Monday, August 27th, 2018

குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்துக்கு அறிவிக்காது ஆயுதப்படை அதிகாரிகள் வெளிநாட்டுக்குச் செல்வதற்கு அதிகாரம் உள்ளது என்று குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நிகால் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

கடற்படையின் கப்பல்களில் நாட்டை விட்டு வெளியேறுபவர்கள் பற்றிய விவரங்கள் குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்துக்கு கிடைக்கிறதா என்ற கேள்விக்கு அனித்த சிங்கள ஊடகமொன்றுக்கு பதிலளித்தார்.

இது தொடர்பாக முடிவெடுப்பதற்கு பாதுகாப்பு அமைச்சுக்கும் தமது திணைக்களத்துக்கும் அதிகாரம் உள்ளது என்றும் நிகால் ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இதுபற்றி கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் தினேஸ் பண்டாரவிடம் கேள்வி எழுப்பியபோது இந்த விடயம் குறித்து தனிப்பட்ட முறையில் தமக்கு தெரியாது என்றும் குடிவரவு, குடியகல்வு விவகாரங்களைக் கையாளுவதற்கு கடற்படை தனிப்பிரிவு ஒன்றைக் கொண்டிருக்கிறது என்றும் பதிலளித்தார். அந்தப் பிரிவு, குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்துக்கு தகவல்களை வழங்குகிறதா என்பது தொடர்பில் தனக்குத் தெரியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

Related posts: