சிறுபான்மை கட்சிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டால் எல்லை நிர்ணயம் மீள் பரிசீலனை – அமைச்சர் பைசர் முஸ்தபா!

Friday, January 20th, 2017

சிறு கட்சிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டால் எல்லை நிர்ணயம் குறித்து மீள் பரிசீலனை செய்யப்படும் என உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

எல்லை நிர்ணய அறிக்கையின் ஊடாக சிறு கட்சிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்தால் அது தொடர்பில் மீளவும் பரிசீலனை செய்ய முடியும். எல்லை நிர்ணய அறிக்கையின் ஊடாக சிறு கட்சிகளின் தலைவர்கள் சிலர் தமது கட்சிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காண கருத்துக்கள் கோரி நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது எல்லை நிர்ணய அறிக்கையின் அச்சுப்பிழைகள் எழுத்துப் பிழைகள் சரி செய்யப்பட்டு வருகின்றன. அறிக்கை தொடர்பில் எதிர்வரும் 23ம் திகதி பிரதமர் தலைமயில் கூடி ஆராயப்பட உள்ளது என பைசர் முஸ்தபா குறிப்பிட்டுள்ளார்.

 faizer-mustapha

Related posts: