இலங்கை இளைஞர்களின் திறனை அபிவிருத்தி செய்ய அமெரிக்கா உதவி!

Wednesday, November 23rd, 2016

அமெரிக்க தூதரகத்தின் வருடாந்த இளைஞர் வலுவூட்டல் நன்கொடை நிகழ்ச்சியின் ஒரு பகுதியான 8 உள்நாட்டு சிவில் சமூக நிறுவனங்களுக்கு சுமார் 60ஆயிரம் அமெரிக்கா டொலர்களை அமெரிக்கத் தூதரகம் வழங்கியுள்ளது.

சுற்றுச்கூழல் தொடர்பான விழிப்புணர்வை அதிகரிப்பதில் இருந்து தலைமைத்துவப் பயிற்சியை வழங்கல், பால்நிலை சமத்துவத்தை முன்னிறுத்தல் மற்றும் ஒதுக்கப்பட்ட சமுதாயங்களின் உரிமைகளை மேம்படுத்தல் என இலங்கையில் மற்றத்தை ஏற்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ள இளைஞர்சார் குழுக்களுக்கு ஆதரவளிப்பதில் அமெரிக்கத் தூதரகம் பெருமை கொள்வதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் பொது விவகாரங்களுக்கான அதிகாரி ஜேம்ஸ் ரூஸோ தெரிவித்துள்ளார்.

சமுதாய அபிவிருத்தி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நல்லிணக்கம், மனித உரிமைகள் மற்றும் வேலை வாய்ப்பு திறன்களை விருத்தி செய்தல் என்பவற்றை இலக்கு வைத்த நிகழ்ச்சிகளுடான பல்வேறு பிரேரணைகளில் இருந்து எட்டு வெற்றி பெறுநர்கள் இவ்வருடத்திற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். நூற்றிற்கும் மேற்பட்ட நிகழ்ச்சி திட்டங்களுக்கு 2010 ஆம் ஆண்டு தொடக்கம் மொத்தமாக சுமார் ரூ.135 மில்லியனை இளைஞர் வலுவூட்டல் நன்கொடை நிகழ்ச்சியின் ஊடாக அமெரிக்கத் தூதரகம் வழங்கியுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.

47176311

Related posts: