நவீன வசதிகளுடன் கூடிய 1000 தேசிய பாடசாலைகள் அமைக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்!

Thursday, December 31st, 2020

நாட்டில் சகல வசதிகளுடன் கூடிய ஆயிரம் தேசிய பாடசாலைகளை அமைக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப வைபவம் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தலைமையில் கோட்டை ஸ்ரீ ஜயவர்தனபுர கல்லூரியில் இடம்பெற்றது.

வேலைத்திட்டத்தின் முதல் பாடசாலையாக சுமார் 200 வருடங்கள் பழைமைவாய்ந்த இந்த கல்லூரி தெரிவு செய்யப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு முழுமையான கல்வியை வழங்கும் விடயத்தில் கணினி தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம், மொழிக்கல்வி உள்ளிட்ட வசதிகள் விருத்தி செய்யப்பட வேண்டும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

நாட்டில் அமைக்கப்படும் புதிய தேசிய பாடசாலைகள் இந்த அனைத்து வசதிகளையும் வழங்கும் என அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வழிகாட்டலின் கீழ், ஆயிரம் தேசிய பாடசாலைகளை அமைக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பல கட்டங்களாக இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்படும்.

முதலாம் கட்டத்தில் 123 பாடசாலைகளும், இரண்டாம் கட்டத்தில் 673 பாடசாலைகளும் தேசிய பாடசாலைகளாக அபிவிருத்தி செய்யப்படும் என கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: